முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரெயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
டோக்கியோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ அவர்களையும் மற்றும் வர்த்தக அமைப்புடன் உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனிருந்தார்.
அப்போது ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Related posts