‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்த படத்தையும் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..’ என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை ராதிகா அறிவித்துள்ளார்.
மேலும், ‘எனக்கு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts