புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வர் ?

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமானால் இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு,முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகள் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளாத குறைபாடு காணப்படுகிறது. தெற்கில் உள்ள அரசியல் கட்சிகளே முன்னணியில் செயற்படுவதுடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts