ராஜபக்ஸர்களின் குப்பை லொரியாக எவரும் மாற மாட்டார்கள்

இந்நாட்டை இந்தளவு அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ஸ ஆட்சிதான் எனவும், அந்த ராஜபக்ஸர்களின் குப்பைகளை இழுக்கும் குப்பை வண்டியாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் மாற மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று முழு நாடும் பொருளாதார சமூக அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளதாகவும், 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையை தேர்ந்தெடுத்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ரக்வான தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் பீ.கே.ஆரியவன்சவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வங்குரோத்து நாட்டில் நடக்கும் சமீபத்திய அதிசயம் சர்வகட்சி அரசாங்கம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு தேவை அமைச்சுப் பதவிகளை அணிந்து கொண்டு பதவிக்குப் பின்னால் செல்லும் நாடு அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டியது தேர்தலை நடத்தி மக்களின் முடிவைக் கேட்பதுதான் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு மேல் தீர்வொன்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts