விபத்துகளால் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு

நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

மேலும், பெரும்பாலான வயோதிபர்கள் கீழே விழுவதனூடாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர் என்று சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் ஷிரோமி மதுவகே கூறியுள்ளார்.

Related posts