பந்தயத்தில் முந்துவாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘மாமன்னன்’ படம் தான் கீர்த்தி சுரேசுக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் இதர நடிகைகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடிக்க அவர் போராடுகிறார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் சிலரது பேச்சுகளை கேட்டு உடலை குறைக்க முயற்சி மேற்கொண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் மெலிந்து போனார்.

படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இதுவே காரணமாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் உடலை பொலிவாக்க ஆயுர்வேத சிகிச்சைகளை மேற்கொண்டார். இதற்கிடையில் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக ‘சர்க்காரு வாரி பட்டா’ படத்தில் நடித்தார்.

ஆனாலும் இந்த படம் பெரியளவில் வெற்றி பெறாமல் போனது. தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘மாமன்னன்’ படம் தான் கீர்த்தி சுரேசுக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் கீர்த்தி சுரேஷ் உறுதியாக இருக்கிறார்.

இதன் மூலம் மீண்டும் இதர நடிகைகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடிக்க அவர் போராடுகிறார். பந்தயத்தில் முந்துவாரா கீர்த்தி சுரேஷ்?

Related posts