சல்மான்கான் புகழ்ச்சியும், சமந்தாவின் பூரிப்பும்…

புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் தான் தனக்கு பிடித்த பாடல் என சல்மான்கான் தெரிவித்த வீடியோவை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சல்மான் கான். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சல்மான்கான் தற்போது ‘கபி ஈத் கபி திவாளி’, ‘பதான்’, ‘டைகர்-3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சல்மான்கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில், ‘உங்கள் மனம் கவர்ந்த பாடல் எது?’ என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் ‘ஊ… ஆண்டாவா… (ஊ சொல்றியா மாமா…)’ என்று சிணுங்கியபடி பாடி சென்றார்.

‘புஷ்பா’ படத்தில் சமந்தா கவர்ச்சியால் கிறங்கடிக்கும் அளவு ஆடிய அந்த பாடலை, சல்மான்கான் தனது மனம் கவர்ந்த பாடல் என்று குறிப்பிட்டதால் சமந்தா பூரித்து போயிருக்கிறார்.

சல்மான்கான் நடிக்கும் ‘நோ என்ட்ரி’ படத்தின் 2-ம் பாகத்துக்கு கதாநாயகியாக சமந்தா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts