சசிகுமார் : ‘காரி’ படத்தின் டிரைலர் !

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘காரி’. இந்த படத்தில் நடிகை பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சம்யுக்தா சண்முகநாதன், பாலாஜி சக்திவேல், ஜே.டி.சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில் காரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

காதல், ஆக்‌ஷன், ஜல்லிக்கட்டு என கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக ‘காரி’ உருவாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts