நித்தியானந்தா எங்கே ? சமாதியிலா? கோமாவிலா?

சென்னை பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.
ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார்.

அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை.

பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது என கூறி உள்ளார். இதுகுறித்து நித்யானந்தாவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பரமசிவனின் ஆசிர்வாதம்!
சமாதி குறித்து சமாதியில் இருந்து மற்றொரு லைவ் கவரேஜ் தருகிறேன். பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது. அதிர்ஷ்டவசமாக எனது முழு உடலும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
பல நோயறிதல் முறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமாதி நிலையில் இருப்பது என்பது நோயல்ல என்பதை ஆவணங்களுடன் நிரூபித்துவிட்டாயிற்று.

எனது இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. நான் முழுக்க முழுக்க ஐசியூ செட்டப்பில்தான் இருக்கிறேன். சமாதி என்பது கோமா நிலை அல்ல.
என் உடல் சரியானதும் வழக்கம்போல் சத்சங்கங்கள் கொடுக்கும் போது நான் இந்த உலகிற்கு மருத்துவ அறிக்கைகளை வெளியிடுவோம். உணவோ திரவங்களோ அருந்தாவிட்டாலும் எனக்கு அசதி என்பதே இல்லை.

எனக்கு பொழுதுபோக்கு இல்லை. தருமபுரம் ஸ்ரீ சுவாமிநாதனின் தேவாரத்தை கேட்பேன். து போரடிக்கவில்லை. சமாதி என்பது மனம் சார்ந்த நிலை அல்ல, உணர்வுபூர்வமான நிலை. உடல், மனம், உணர்ச்சிகளுக்கு அப்பால் உள்ளது.
எனக்கு தனிப்படட ஆர்வமும் நோக்கங்களும் இல்லை. என்னை பற்றிய தனிப்பட்ட யோசனை அல்லது கருத்து அல்லது அறிவாற்றல் கூட என்னிடம் இல்லை. சமாதி என்பது ஒரு தீவிர ஆன்மீக நச்சு நீக்கம் ஆகும்.

இப்போது வரை பல ஆய்வுகளை மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் செய்து ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். நான் அடுத்த சில நாட்களில் சத்சங்கம் செய்ய திரும்பி வருவேன் சமாதி நிலையின் போது மட்டும் எனது உடலை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் எனது சீடர்களும் அந்த நிலையை புரிந்து கொண்டு என் உடலை தொடாமல் உள்ளார்கள் என்றார்.
மருத்துவ அறிக்கையை எப்போது வெளியிடுவார் என்பதை நித்யானந்தா அறிவித்துள்ளது நெட்டிசன்களை குழப்பமடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உடலுக்கு என்ன ஆச்சு என்பது குறித்தும் உடல் உறுப்புகளின் நிலை என்ன என்பது குறித்தும் நித்யானந்தா வெளியிட்டிருந்தார்.
அதில் எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கிறது எனும் போது புதிய மருத்துவ அறிக்கையில் என்ன இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நித்யானந்தா குறித்து அவரது சிஷ்யைகள் கூறுவது என்ன…?
ஒரு மண்டலம் என்ற கணக்கின் படி கடந்த 48 நாட்களாக சமாதியில் இருப்பதாக சொன்ன நித்தியானந்தா, என்ன ஆனார்? என்ற பேச்சே பரவலாக உள்ளது. கோமாவிற்கு சென்றுவிட்டார் என செய்திகள் உலா வந்த போதிலும் அதை எல்லாம் மறுக்கும் அவரின் சிஷ்யைகள் விளக்குகளை ஏற்றி வைத்து அவருக்காக வழிபட்டு வருகின்றனர்.
நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யைகளான நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோரின் இணைய பக்கங்களிலும் இந்த பிரார்த்தனை புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதால் நித்தியின் உடல்நிலை குறித்த சலசலப்பு எழுந்துள்ளது

Related posts