சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி

ரணில்விக்கிரமசிங்கவின் நியமனத்துடன் அல்லது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதால் கோத்தபாய ராஜபக்ச தன்னை மீண்டும் உறுதிப்படுத்துக்கொண்டுள்ளார் அவரது நிலைமை ஓரளவு ஸ்திரமானதாக மாறியுள்ளது
2 அரசியல் ரீதியில் இது பிரச்சினைகளை தீர்க்கும் போல தோன்றவில்லை.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிஙக குறித்தும் ஐக்கிய தேசிய கட்சி குறித்தும் என்ன கருதுகின்றார்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் அறிந்துள்ளதால் பல கருத்துவேறுபாடுகள் முரண்பாடுகள் உருவாகும் என கருதுகின்றேன்.

கேள்வி

இந்த நெருக்கடியான தருணத்தில் ரணில்விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில்-
இலங்கையின் பெருமளவான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில்; ஈடுபட்டுள்ளது உங்களிற்கு தெரியும்- இந்த இயக்கத்தை இளைஞர்கள் ஆரம்பித்தார்கள் அவர்களே அதற்கு தலைமை வகிக்கின்றார்கள் இளைஞர்களும் யுவதிகளும்.
அவர்கள் வீதிகளை ஆக்கிரமித்துள்ளனர்- காலிமுகத்திடல் போன்றவற்றை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிற்கு மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு உள்ளது.
கருத்துக்கணிப்புகள் – நம்பகதன்மை மிக்க கருத்துக்கணிப்புகள் 85 – 90 வீதமான மக்கள் ( இளையவர்களும் முதியர்வர்களும்)ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என கருதுவதை வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என விரும்புகின்றனர்.
இந்த நிலையில் அவர் பதவி விலகதயாரில்லை-அவர் தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் நீடிக்க முயல்கின்றார் –பிரதமராக பதவி வகிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கிய தருணத்தில் ஜனாதிபதி அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமானவராக காணப்பட்டார்-
ரணில் விக்கிரமசிங்க ஏன் இணங்கினார் என்பது தெரியாது –தற்போது முழு நாடும் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த பிரதமராக ரணில்விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.
அவர் ராஜபக்ச கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதமர்.
அந்த அரசாங்கத்தில் வேறு எவரும் இல்லை.
ஏனைய கட்சிகள் அரசாங்கத்தில் இணைய மறுக்கின்றன தாங்கள் அரசாங்கத்துடன் உள்ளதாகவும் மக்கள் ராஜபக்சாக்கள் விலகவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது என்ன இடம்பெற்றிருக்கின்றது என்றால் ரணில்விக்கிரமசிங்கவின் நியமனத்துடன் அல்லது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதால் கோத்தபாய ராஜபக்ச தன்னை மீண்டும் உறுதிப்படுத்துக்கொண்டுள்ளார் அவரது நிலைமை ஓரளவு ஸ்திரமானதாக மாறியுள்ளது.முழுமையாக என தெரிவிக்க மாட்டேன் ஏனென்றால் இளைஞர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றார்கள்.
அரசியல் ரீதியில் இது பிரச்சினைகளை தீர்க்கும் போல தோன்றவில்லை.
கேள்வி – உங்களுடைய பார்வையில் ரணில் விக்கிரமசிங்க மோசமான தவறு இழைத்துவிட்டாரா அல்லது கௌரவமான முடிவை எடுத்துள்ளாரா?
பதில் – நான் இரண்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் – இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்று.
நாடு பெரும் குழப்பத்தில் உள்ளது,எங்களின் மூவாயிரம் வருட அறியப்பட்ட வரலாற்றில் நாங்கள் இவ்வாறான நிலையில் இருந்ததில்லை.
உணவு இல்லை எரிபொருள் இல்லை இது பற்றி முழுமையாக தெரிவிக்கப்போவதில்லை ஊடகங்களிற்கு தெரியும் முழு உலகிற்கும் தெரியும்,
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எரிவாயு நிலையங்களிற்கு வெளியே பல கிலோமீற்றருக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது-ஐந்து ஆறு ஏழு மணித்தியாலங்கள்.
எனது வீட்டில்- முன்னாள் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் பத்து மணித்தியாலம் மின்வெட்டு காணப்பட்டது இது குறைக்கப்பட்டுள்ளது – ஆகவே நிலைமை மோசமாக உள்ளது.
கேள்வி – ரணில் விக்கிரமசிங்கவிற்கான இலங்கை மக்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது? அவருக்கு இலங்கை மக்களின் குறிப்பாக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆதரவுள்ளதா? பிரதமர் அவர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டினார் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனரா? அல்லது நிராகரித்துள்ளனரா?
பதில் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர் அவர்கள் கோட்டபாய பதவி விலகவேண்டும் என விரும்புகின்றனர் அவரை பலப்படுத்த ஒருவர் வந்துள்ளமை குறித்து அவர்கள் சீற்றமடைந்துள்ளனர்.
அவர்கள் இது வரை சாதகமாக பதிலளிக்கவில்லை.
ரணில்விக்கிரமசிங்கவும் அவரின் சிறிய குழுவினரும் எதிர்கட்சிகளின் ஆதரவை பெற முயல்வதாக அறிகின்றேன்,
இதுவரை யாரும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை பலர் இது நிகழ்ந்த விதம் குறித்து சீற்றமடைந்துள்ளனர்.
ரணில்விக்கிரமசிங்க எதிர்கட்சியை சேர்ந்த எவருடனும் கலந்தாலோசிக்கவில்லை – தான் பிரதமர் பதவியை ஏற்கப்போகின்றேன் என்பதை தெரிவிக்கவில்லை.பிரதமரான பின்னர் அவர்களை தங்களுடன் இணையுமாறு அவர் கேட்கின்றார் அவர்களிற்கு இது குறித்து மகிழ்ச்சியில்லை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
கேள்வி- கோத்தபாய ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்க கூட்டணியால் அரசியல் ஐக்கியத்தையும் பொருளாதாரத்தை நலத்தையும் ஏற்படுத்த முடியுமா, அல்லது இது ஏற்கனவே மோசமாக உள்ள நிலைமையை மேலும் மோசமாக்குமா?
பதில்- என்ன நடக்கப்போகின்றது என்பதை என்னால் மதிப்பிட முடியாது ஏனென்றால் நிலைமை மிகமோசமானதாக பதற்றமானதாக காணப்படுகின்றது- ஒவ்வொரு நாளும் மாற்றமடைகின்றது .ஆனால் இருவரையும் அறிந்தளவில் அவர்கள் முன்னோக்கி நகர்வது கடினம், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிஙக குறித்தும் ஐக்கிய தேசிய கட்சி குறித்தும் என்ன கருதுகின்றார்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் அறிந்துள்ளதால் பல கருத்துவேறுபாடுகள் முரண்பாடுகள் உருவாகும் என கருதுகின்றேன்.
ஆகவே இது ஸ்திரமற்ற நிலைமையாக காணப்படப்போகின்றது.
அதேவேளை நாடு மோசமான நிலையில் இருக்கும்போது சிரேஸ்ட தலைவர் பிரச்சினைக்கு தீர்வை காணமுயல்வது சிறந்த நடவடிக்கையாக தோன்றும்.
ஆனால் என்ன முறையில் பிரச்சினைக்கு தீர்வை காண முயல்கின்றீர்கள் என்பது முக்கியம் .
இந்த தருணத்தில் நாட்டிற்கு தேசிய அரசாங்கமே அவசியம்.அது அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியதாக காணப்படவேண்டும்.
ரணில்விக்கிரமசிங்க இந்த அரசாங்கத்தில் நுழைந்த விதம் ஏனையவர்கள் இணைந்துகொள்வதற்கு உகந்ததாக இல்லை – அவர்கள் ஏனையவர்களை இணைத்துகொள்வதற்காக இலஞ்சம் வழங்கவேண்டியிருக்கும் ஏனைய பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கும் இது உங்கள்நாட்டிலும் எங்கள் நாட்டிலும் அபூர்வமான விடயமல்ல என்பது உங்களிற்கு தெரியும்.
அரசியல்ரீதியாக இது சாதகமான ஆக்கபூர்வமான முறையில் இடம்பெறவில்லை.கேள்வி- ஜனாதிபதி குமாரதுங்க அவர்களே இந்த பேட்டியின் முக்கியமான பகுதிக்கு வருவோம் – நீங்கள் இலங்கையில் ஆட்சி முறை இடம்பெறும் விதத்தில் மாற்றங்களை முற்றாக மேற்கொள்வதற்கு தொடர்ச்சியாக பல தீர்வுகளை முன்வைத்துள்ளீர்கள் – நீங்கள் ஜனாதிபதி சுயாதீனமான நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவை பெற்ற சுயாதீனமான ஒருவரை பிரதமராக நியமிக்கவேண்டும் என தெரிவிக்கின்றீர்கள் – நாடாளுமன்றத்திற்கு வெளியிலிருந்து அரசியலுக்கு வெளியிலிருந்து ஒருவரை நியமிக்கவேண்டும் என தெரிவிக்கின்றீர்களா?
பதில் முழுமையாக அரசியலிற்கு வெளியில் உள்ளவராகயிருக்க முடியாது-அவர் முன்னாள் அரசியல்வாதியாக இருக்காலம் – மிகவும் மதிக்கப்படுகின்ற இலங்கையராகயிருக்கலாம்,நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவு அவசியம்
தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிடிக்காததால் சில கட்சிகள் அரசாங்கத்தில் இணைய மறுக்கின்றன,இதன் காரணமாகவே நான் சுயாதீன நபர் என தெரிவித்துள்ளேன்.
சில நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன இதனை நான் இங்கு தெரிவிக்கவிரும்பவில்லை.
கேள்வி – இந்த நபரை பிரதமராக நியமித்த பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக பதவி விலகவேண்டும் அதன் பின்னர் இவர் தானாக ஜனாதிபதியாவார் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் மதிப்பிற்குரிய சுயாதீன நபர் வேகமாக ஜனாதிபதியாவதை விரும்புகின்றீர்கள்?
பதில்-ஆம் ஆம்- ஆனால் இடைக்கால அரசாங்கமொன்றில் என நான் தெரிவிக்கின்றேன்- ஏனென்றால் நாங்கள் தேர்தலை நடத்தவேண்டும் மக்கள் தேர்தலை கோருகின்றார்கள் அதுவே இறுதிதீர்வாக அமையும்.
ஆறு மாதகாலத்திற்கு என்றே நான் தெரிவிக்கின்றேன்-.

Related posts