உன்னதத்தின் ஆறுதல். வாரம் 22.19 மன்றாட்டு ஜெபம்.

இரட்சிப்பின வசனம்.

ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால்நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.யாத்திராகமம்32.32

மன்றாடுவது என்பது, ஒன்றுக்காக மிகவும் இரந்து, கெஞ்சி கேட்பதைக்குறிக்கும். இதன்உச்சக்கட்டமாக சிலர் பொருத்தனை செய்து ஜெபிப்பதுண்டு. எமது உள்ளத்தில் அதிகவிசாரங்கள் பெருகும்போது, தேவசமூகம் சென்று மன்றாடி ஜெபிப்பது உண்டல்லவா? அதேபோல்ஆலயங்களில் இப்போது மிகுந்த இருதய பாரத்தோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்படுவதையும், தேவைஉள்ளவர்கள் வருகைதந்து மன்றாடி ஜெபிப்பதையும் இன்று காணக்கூடியதாக உள்ளது.

நாம் வாசித்த வேதப்பகுதியில் மோசே, இஸ்ரவேல் மக்களின் பாவங்களை அவர்களுக்குமன்னிக்கும்படியாக மன்றாடுவதைக் காண்கிறோம். இந்த மன்றாட்டு ஜெபம்வெறும்வார்த்களாகவோ அல்லது, கடமைக்காகவோ செய்யப்பட்ட ஒன்றல்ல. மோசே ஜெபித்த விதத்திலிருந்து அது அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த மன்றாட்டு ஜெபம் என்பதை நாம்காணக்கூடியதாகவுள்ளது.

“இந்த ஜனங்களை மன்னிக்கக் கூடுமானால் மன்னியும், இல்லாவிட்டால்என் பேரை ஜீவப்புத்தகத்திலிருந்து கிறுக்கிக்போடும்” என மோசே ஜெபித்தார். அதாவது தான்தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை, தனது ஜனங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதே ஜெபம். ஜனங்களுக்காக மன்றாடி எப்படியாவது தேவனுடைய கோபாக்கினையில் இருந்து அவர்களைத்தப்புவிக்க வேண்டும் என்பதே மோசேயின் ஜெபத்தின் நோக்கமாய் இருந்தது.

நாம் எமது தேவைகளுக்காக ஒருவேளை மன்றாடி ஜெபித்திருக்கலாம். ஆனால் பிறருடையதேவைகளுக்காக மன்றாடி ஜெபித்ததுண்டா? மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்கும் ஜெபங்கள்பலதடவைகளில் கடமைக்காக ஜெபிப்பது போன்றே அமைந்து விடுகிறது. ஒருவர் தனக்காகஜெபிக்கும்படியாக கேட்டால், அவருக்கு சரி என்று சொன்னதற்காக ஜெபிப்பதுபோல அன்றுஜெபித்து விட்டு, பின்னர் அதை மறந்து விடுவோம்.

அவருக்காக தொடர்ந்து ஜெபிப்பதோ அல்லதுஅவரின் தேவையை நமது தேவையாகக் கருதி உணர்வுடன் ஜெபிப்பதோ கிடையாது. அடுத்தமுறைஅவரைச் சந்திக்கும்போது, எனது தேவை நிறைவேறிவிட்டது, நீங்கள் ஜெபித்தற்காக நன்றி என்றுஅவர் கூறுவார். அப்படியா என்று சொல்லி அவர் தரும் நன்றிகளையும் கூசாமல்ஏற்றுக்கொள்ளுவோம். எவ்வளவு துாரம் அவருக்காய் பாரப்பட்டு நாம் ஜெபித்தோம் என்பதுகேள்விக்குறியே?

அருமையான தேவஜனமே, எப்போதுமே சுயநலமான ஜெபங்களை ஏறெடுப்பதை விட்டுவிட்டு, மற்றவர்களுக்காக பாரத்தோடு மன்றாடும் மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுக்கப் பிரயாசப்படுவோம்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts