கே.ஜி.எஃப்-2′ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியீடு

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2′. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் படமானது வெளியாகியுள்ளது.

——

நவீன முறையில் கதை, திரைக்கதை, படத்தொகுப்பை கொடுத்து மகிழ்வித்துள்ளதாக கேஜிஎஃப் 2 படக்குழுவை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதிரடி காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைத்துள்ளதாகவும், யாஷ் மாஸாக நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். “பெரியப்பா” வசனம் வரும் காட்சியை குறிப்பிட்டு கூறியுள்ள ஷங்கர், பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு சகோதரர்களையும் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

Related posts