இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு

இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது.

கடந்த 12ந்தேதி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் முழக்கத்திற்கு தனது ஆதரவையும் வழங்கினார். பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.எனினும், அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாள்தோறும் அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இதற்கிடையே, இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாடு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts