வைரலாகும் வடிவேலுவின் ‘சிங் இன் த ரெயின்’

நடிகர் பிரபுதேவா, வடிவேலு சந்தித்துக்கொண்ட போது வடிவேலு பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபுதேவா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மனதைத் திருடி விட்டாய்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவையாகும். பிரபுதேவா, வடிவேலு, விவேக் என மூவரும் காமெடியில் அசத்தி இருப்பார்கள். இந்த படத்தின் ஒரு காட்சியில் வடிவேலு பாடிய, ‘சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்’ என்ற காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் தற்போது நடிகர் பிரபுதேவா, வடிவேலு சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வடிவேலு, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து ‘சிங் இன் த ரெயின்’ பாடலைப் பாடி, மகிழ்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரபுதேவா ‘நட்பு’ என ஒரே ஒரு வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts