தலைவர் பதவி கிடைக்காதாதல் விரக்தி இனி போட்டியில்லை..

டேனிஸ் போல்க்க பார்டியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மார்டின் கென்றிக்சன், இவர் அக்கட்சியின் வெளிநாட்டவர் விவகாரப் பிரிவு பொறுப்பாளராகவும் இருந்தவர்.

தலைவர் தேர்தலில் வென்ற மோற்றன் மாஸ்ச ஸ்கிமிற்கு 60 வீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைத்தன அதாவது 499 வாக்குகள் பெற்றார்.

தோல்வியடைந்த மார்டின் கென்றிக்சனுக்கு 219 வாக்குகள் கிடைத்ன இரண்டாவது இடம் கிடைத்தது.

இதனால் விரக்தியடைந்தோ என்னவோ தான் இனிமேல் ஒன்றரை வருடங்களில் வரவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மார்டின் கென்றிக்சன் இன்று அறிவித்துள்ளார்.

புதிய தலைவரில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே புதிய தலைவருக்கும் இவருக்கும் கட்சிக்குள் ஜல்லிக்கட்டு மோதல் நடந்ததாக கூறப்படுகிறது.

பழைய கறளை தட்ட நினைக்கும் புதிய தலைவர் தனது பலத்தை வைத்து தன்னை தூக்க முயல்வார் என்று கருதுகிறார், காரணம் கடைசியாக பதவி விலகிய தலைவர் கூட இவர் பியா கியாஸ்கோ என்ற முன்னாள் தலைவியை விமாசித்த காரணத்தால் கட்சியில் செல்வாக்கு மிக்க அம்மையார் இவரை விலத்த முயன்றதாக தெரிவித்தார்.

இப்போது தலைவர் தேர்தலில் தோற்றதால், பழைய கணக்கை தீர்க்க இவரை தூக்கி வீச முயல்வார்கள் என்பது எதிர் பார்ப்பு. அதற்கு முன் இவர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால் புதிய தலைவரோ அப்படியெல்லாம் எதுவும் கிடையாது அவரை அன்புடன் வரவேற்பதாக கூறுகிறார். கட்சி இரண்டாக பிளவுபட்டிருப்பதன் அடையாளம் இது.

41 வயதுடைய மார்டின் கென்றிக்சன் ஸ்ரெவன்;;ஸ் நகரத்தில் இருந்து தேர்வாகி 14 வருடங்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

அவ்வப்போது வெளிநாட்டவர்களை தனது சுண்டல் கருத்துக்களால் நோகடித்தவர் என்ற விமர்சனமும் இவர் மீது இருக்கிறது.

கடந்த நகரசபை தேர்தலில் ஸ்ரெவன்;;ஸ் நகரத்தில் இவர் கட்சி எடுத்த வாக்குகள் 886 அதில் இவர் பெற்ற சுய விருப்பு வாக்குகள் 604 இதனால் அப்பதவிப் பக்கமாக பார்வையை திருப்ப இருக்கிறார்.

புதிய தலைவரின் தவறுகளை சிறிதோ பெரிதோ தாங்கியபடி பயணிக்க தன்னால் முடியாது என்கிறார்.

போட்டிக்கு போவது தோற்றவுடன் விரக்தியடைவது, போன்ற டேனிஸ் போல்க்க பார்டியின் சிறு பிள்ளை விளையாட்டுக்கள் அரசியல் அரங்கில் மேலும் பல வேடிக்கை மிகு காட்சிகளை அரங்கேற்றப் போகிறது.

ஏற்கெனவே டேனிஸ் பாராளுமன்று என்பது ஓரு பாலர் வகுப்பு விளையாட்டிடம் என்று விமர்சிக்கப்பட்டது, இப்போது அவர்களை முதிர்ந்த அரசியல்வாதிகளாக இவர்களின் மேதல் காட்ட வழியிருக்கிறது.

டேனிஸ் போல்க பார்டியால் நொந்தவர்களுக்கு இநஇத வீழ்ச்சி சிறிது ஆறுதல் கொடுக்கலாம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

அலைகள் 25.01.2022

Related posts