டேனிஸ் போல்க்கபார்டி புதிய தலைவர் தேர்வானார்.

இன்று 23.01.2022 அன்று கேர்னிங் கொங்கிரஸ் சென்ட்டரில் இடம் பெற்ற டேனிஸ் போல்க்க பார்டியின் சிறப்பு மாநாட்டில் புதிய தலைவர் தேர்வானார்.

01. மேற்றன் மாஸ்சஸ்கிமிற் 499 வாக்குகள்
02. மாட்டின் கென்றிக்சன் 219 வாக்குகள்
03. மெற்ற டிய லாசன் 107 வாக்குகள்

அளிக்கப்பட்ட வாக்குகள் 828 செல்லுபடியற்றவை 03
இதன்படி புதிய தலைவராக மேற்றன் மாஸ்சஸ்கிமிற் வெற்றி பெற்று தலைவரானார்.

பழைய தலைவர் கிறிஸ்டியான் ருலீசன் டாலிற்கு கடந்த திங்கள் கொரோனா தொற்றியதால் சமூகமளிக்க முடியவில்லை அவர் வீடியோ மூலம் பேசினார். அவர் தலைமைப் பதவியில் இருந்து விலக காரணம் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்ததால் அதற்கு பொறுப்பேற்று விலக இருப்பதாக அறிவித்திருந்தார்.

புதிதாக தேர்வான மேற்றன் மாஸ்சஸ்கிமிற் தன்னோடு போட்டியிட்ட மற்ற இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். தனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளை மதிப்பதாகக் கூறிய அவர் தனது தலைமையின் மூலம் ஏற்படப் போகும் முன்னேற்றம் தமது எதிரிகளால் உணரப்படும் என்றார். அதை செய்ய தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவியுமான பியா கியாஸ்கோ அம்மையார், கட்சியின் வீழ்ச்சிக்கு பதவி விலகும் முன்னாள் தலைரே பொறுப்பேற்க வேண்டும் என்று ஆத்திரத்தை வெளியிட்டார்.

விரக்தியிலிருந்த பதவி விலகும் தலைவர் முதல் தடவையாக அம்மையாரை காய்ச்சி எடுத்தார். அம்மையார் 2012 ல் விருப்பின்றியே தலைமைப் பதவியில் இருந்து வெளியேறினார். அத்தோடு தனது நிலையை புரிந்து நடந்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு நடக்கவில்லை. அம்மையாருடைய குறுக்கீடுகள் நிறைய இருந்ததாகவும், இப்போதும் தானே தலைவி என்பது போல அவருடைய குறுக்கீடுகள் தொடர்வது பெரும் தொல்லை என்ற அவர் 2021 தேர்தல் கூட்டத்தில் றொயவி நகரில் பியா கியாஸ்கோவை விமர்சித்த மாற்றின் கென்றிக்சனை பதவி விலத்த வேண்டும் என்று துடிதுடித்தவர் பியா கியாஸ்கோ என்றும் கூறினார்.

இவ்வாறு பழைய தலைவர்களிடையே மோதல் நிலவ புதிய தலைவர் வந்துள்ளார். இவர் மீதும் ஐரோப்பிய ஒன்றிய பணத்தை பாவித்தவர் என்ற விமர்சனம் உண்டு. ஒரு காலத்தில் டேனிஸ் போல்க்க பார்டி சிறந்த யுனிக்கான கட்சியாக இருந்தது உண்மை. அந்தக் கட்சி அகதிகள் வெளிநாட்டவர் தொடர்பாக வைத்த பல விமர்சனங்களை டேனிஸ் வாக்களார் ஏற்று தொடர்ந்தும் வாக்களித்தும் வந்தனர். வென்ஸ்ர கட்சி ஆட்சியில் இக்கட்சியே பிரதான தீர்மானமெடுக்கும் சக்தி மிக்க கட்சியாகவும் இருந்தது.

ஆனால் கொரோனாவின் வருகை அகதிகள் வருகையை நிறுத்தியது. அது பிரச்சனையை கொரோனாவிற்குள் திருப்பியதால் இக்கட்சியின் பிரச்சார மூலப் பொருள் வலு குன்ற, இதன் தேவையும் மங்கியது. ஆனால் இக்கட்சி தன் வீழ்ச்சிக்கான காரணத்தை இன்றும் சரியாக விளங்கியதாக கூற முடியவில்லை, ஏனென்றால் அனைத்து மக்களுக்குமான முன்னேற்ற கரமான கொள்கையை வகுக்கும் கட்சிகளே நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும்.

சூடான ஒரு விடயம் இருக்கும் போது உதயமாகும் கட்சி அந்த சூடு குறைய வீழ்ச்சி காண்பது இயல்பு. ஆகவே டேனிஸ் மக்கள் கட்சி காலத்தை புரிந்து, நூற்றாண்டு கால இருத்தலுக்கான புதிய கொள்கையை மாற்ற வேண்டும். ஆனால் பஞ்சாங்கத்தை மாற்றினால் சாஸ்த்திரி கதை அதோ கதியாகிவிடும் அல்லவா.. அதுதான் சிக்கல். அதனால் இப்படியே தொடரலாம் என்பதே அக்கட்சியின் இன்றைய போக்காக தெரிகிறது.

புதிய தலைவர் கையில்தான் அடுத்த கட்டம் இருக்கிறது, பார்க்கலாம். அவர் உரையும், உடல் மொழியும் ஏதோ ஓர் ஆற்றல் அவரிடம் இருப்பதை காட்டுகிறது.

“எந்த தலைவரிடமும் இல்லாத ஒன்று .. ஏதோ
அது உன்னிடம் இருக்கிறது. ”

அலைகள் 23.01.2022

Related posts