ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியானது

நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜீவா தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.

Related posts