நடுவானில் முகக் கவசம் அணியாத பயணியால்

நடுவானில் முகக் கவசம் அணியாத பயணி ஒருவரால் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததால் மியாமியிலிருந்து லண்டன் பயணித்த அமெரிக்க ஜெட்லைனர் விமானம் அவசரமாக மியாமிக்கே திருப்பி அனுப்பப்பட்டது .

129 பயணிகள் மற்றும் 14 ஊழியர்களுடன் போயிங் 777 விமானம் ஒன்று மியாமர் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் பறந்த போது ஒருவர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டும் அவர் கேட்கவில்லை. இதனால் வேறுவழியின்றி விமானி விமானத்தை மீண்டும் மியாமிக்கே திருப்பினார்.

விமானம் மியாமியில் தரையிறங்கியதும் அனைத்து பயணிகளையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

முகக்கவசம் அணிய மறுத்த நபரை தடை செய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts