திருமணத்துக்குப் பிறகும் நடிப்பை தொடர்கிறார் ‘கயல்’ ஆனந்தி

திருமணத்துக்குப் பிறகும் கயல் ஆனந்தி நடிப்பை தொடர்கிறார். தற்போது, ‘ஒயிட் ரோஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘கயல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், ஆனந்தி. முதல் படத்தின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு ‘கயல்’ ஆனந்தி என்று அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் ‘பிஸி’யாக நடித்து வரும் இவர், திடீர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் இவர் நடிப்பை தொடர்கிறார். தற்போது, ‘ஒயிட் ரோஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகன், ஆர்.கே.சுரேஷ். இன்னொரு நாயகனாக புதுமுகம் ரூசோ நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷின் சொந்த படநிறுவனமான ஸ்டூடியோ 9 தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் என்ற புது டைரக்டர் அறிமுகம் ஆகிறார். இவர், டைரக்டர் சுசிகணேசனிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Related posts