நடிகை ஜோதி ரெட்டி மரணம்

தெலுங்கு துணை நடிகை ஜோதி ரெட்டி, ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கு நடிகை ஜோதி ரெட்டி. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

நடிகை ஜோதி ரெட்டி சொந்த ஊரில் சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு ஐதராபாத்துக்கு திரும்பி உள்ளார். கடப்பாவில் இருந்து ரெயில் மூலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிகூடாவிற்கு செல்லும் வழியில் அவர் அசந்து தூங்கி உள்ளார். தூக்க கலக்கத்தில் கச்சிகூடா ஸ்டேஷனுக்கு பதில் ஷாட்நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

ரெயில் நிலையத்தில் இருந்து ஊர் பெயர் பலகையை பார்த்ததும், தான் தவறான ஸ்டேஷனில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி, மீண்டும் ரெயிலில் ஏற முயற்சித்துள்ளார். ரெயில் கிளம்பிய நிலையில், ஓடி சென்று அவர் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜோதி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 26 வயதே ஆகும் ஜோதி ரெட்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Related posts