ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை

அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார்.

தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனுக்கு உள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ல படம் ரவுடி பாய்ஸ் . ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ள படம் ரவுடி பாய்ஸ்.தில் ராஜுவின் மருமகன் ஆஷிஷ் .

ரவுடி பாய்ஸ் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.

அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன். தற்போது முத்த காட்சியில் நடித்து உள்ளார்.

Related posts