மதுரையில் வளர்ந்த ‘விருமன்’

தமிழ் பட உலகில் தரமான படைப்புகளை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம், அடுத்து கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படத்தை தர இருக்கிறது.

படத்தைப் பற்றி டைரக்டர் முத்தையா கூறுகிறார்:

‘‘இந்தப் படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் மேன்மையை சித்தரிக்கும் குடும்பப் படமாக உருவாகி இருக்கிறது. தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 60 நாட்கள் வளர்ந்து இருக்கிறது.

கார்த்தியின் ஜோடியாக டைரக்டர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். எதிர்பார்த்ததை விட, மிக சிறப்பாக நடித்துள்ளார். பொதுவாக என் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் அழுத்தம் மிகுந்ததாக இருக்கும். வீரமான கதாபாத்திரமாக இருக்கும்.

அதேபோல் அதிதி தனது முதல் படத்திலேயே கனமான வேடத்தில் நடித்துள்ளார். மனோஜ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, சிங்கம்புலி ஆகியோரும் நடித்துள்ளனர்.’’

Related posts