இந்தியா சரியாக நடந்தால் சீனா காலூன்ற இடமில்லை

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாக இருந்தால், சீனா போன்ற பிற நாடுகள் வடக்கு, கிழக்கில் காலூன்றுவதைத் தடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்ற போது, சீனா போன்ற நாடுகள் வடக்கு கிழக்கில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts