தமிழில் ஸ்க்விட் கேமை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்…!

நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஸ்க்விட் கேம்’ என்ற கொரியன் இணைய தள தொடர் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.

கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரானது கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது. வெளியான உடனேயே நெட்பிளிக்ஸின் உலக புகழ்பெற்ற 10 வெப்சீரிஸ்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 17 வெளியான ஸ்க்விட் கேம் சில தினங்களிலேயே பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 90 நாடுகளில் இந்த வெப் தொடர் முதலிடத்தைப் பிடித்தது. இத்தனைக்கும் கொரிய மொழியில் தயாரான வெப் தொடர் இது. குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற வெப் தொடரும் இதுவே.

இந்தியாவிலும் இந்தத் தொடர் பிரபலமானது. ஆனால், இன்னும் அதிக பார்வையாளர்களை சென்று சேரும்வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தத் தொடரை ‘டப்’ செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியில் ஏற்கனவே இது வெளிவந்துள்ளது.

வெப் தொடர்களை ‘டப்’ செய்வதன் மூலம் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2012 இல் இருந்தே நெட்பிளிக்ஸுக்கு அதிகரித்து வருகிறது. இது இப்போது 120 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறார்கள். ஏறக்குறைய 35 மொழிகளில் நெட்பிளிக்ஸ் தனது தொடர்களை ‘டப்’ செய்து வெளியிடுகிறது.

இந்தியாவில் இந்தி பேசுபவர்களுக்கு இணையாக தமிழ், தெலுங்கு பார்வையாளர்கள் இருப்பதால் புகழ்பெற்ற வெப் தொடர்களை தமிழ், தெலுங்கிலும்,நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது.

ஸ்க்விட் கேமின் அபிரிதமான வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை தயாரிக்கிறார்கள். இப்போது போல் தாமதிக்காமல், இரண்டாவது சீஸன் வெளியாகும் போதே, தமிழ், தெலுங்கிலும் அதனை வெளியிட உள்ளனர்.

Related posts