விஜய்யின் 66-வது படம் அரசியல் கதையா?

விஜய்யின் 66-வது படம் முழுக்க அரசியல் கதையம்சம் உள்ள படமாக தயாராக உள்ளது என்றும், இதில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் தகவல் பரவி வந்தது.

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படத்தை எடுக்கின்றனர். இது விஜய்க்கு 66-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படம் முழுக்க அரசியல் கதையம்சம் உள்ள படமாக தயாராக உள்ளது என்றும், இதில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் தகவல் பரவி வந்தது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் வம்சி அளித்துள்ள பேட்டியில், “விஜய் படம் அரசியல் படம் இல்லை.

இது உணர்வுப்பூர்வமான கதையம்சத்தில் தயாராக உள்ளது. இந்த படத்தில் தெலுங்கு சாயல் இருக்காது. முழுமையான தமிழ் படமாகவே இருக்கும். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை” என்றார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Related posts