தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது மாநாடு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படம் வருகிற நவம்பர் 4ந் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு நவம்பர் 25ந் தேதிக்கு தள்ளிப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து உள்ளார்.

படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டி ரீதியில் பட வெளியீட்டை பார்ப்பது வியாபார புத்திசாலித்தனம் இல்லை. விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காகப் பணம் போட்டவர்களும் பட வெளியீட்டின் மூலம் லாபம் அடைய வேண்டுமே தவிர நஷ்டமடையக் கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் படத்தின் வெற்றி பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி நவம்பர் 25ல் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts