கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது

பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
பல தமிழ் படங்களும் போட்டியிட்டன. இதன் நிறைவு விழாவில் இரண்டு விருதுகளை தமிழ் திரைப்படங்கள் பெற்றுள்ளன. சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் படமும், சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் படமும் பெற்றன.
கர்ணன் படத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. கட்டில் படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக வருகிறார். இந்த படத்துக்கு பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டில் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
கர்ணன், கட்டில் படங்கள் ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts