விஷால் – 32 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

விஷால் – 32 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. படத்திற்கு லத்தி சார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.

ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘லத்தி சார்ஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். சமர் திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில் சுனைனா விஷாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts