ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நேற்று (16) சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அவர் மன்னார் மாவட்டத்திற்கு நேற்று (16) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக் கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts