தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற வணிக பிரதியை வெளியிட்டார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். திமுக அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்து உள்ளது. ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 3-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டுவர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts