அமலாபால் கவர்ச்சி புகைப்படம் வைரல்

மைனா படம் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மைனா படம் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெய்வத்திருமகள், தலைவா, வேட்டை, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்த பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது அதோ அந்த பறவைபோல படம் கைவசம் உள்ளது. அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடையில் உட்சபட்ச கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தோடு, “ஒரு பெண் தனது மனம், உடல் உள்ளிட்ட அனைத்து நிலையையும் அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவளாக இருக்கிறாள். பெண் தனது சுய வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வில் கவனம் வைத்தால் அமைதியும், அன்பும் கிடைக்கும். பெண்ணுக்கு விரும்புவதை செய்யும் திறமை இருக்கிறது’’ என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.

Related posts