நீட் தேர்வால் ஏற்படும் மன வலியை உணர்கிறேன்

18 வயது கூட ஆகாத மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது என நீட் குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தற்கொலைகள் தொடர்பாக டாக்டரும் நடிகையுமான சாய் பல்லவி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவம் என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் .

என் குடும்பத்திலும் நீட் தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்க வில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தற்கொலை செய்து கொள்வது உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் செயல் ஆகிவிடுகிறது. தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் பேசிவிட முடியும் . ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் . அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும்.

பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் . பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

அழுத்தங்கள் எதுவும் பயனளிக்காது. பள்ளியில் நான் படிப்பது எதுவும் நினைவில் இல்லை கல்லூரியில் நடித்த படங்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என்றார்.

Related posts