23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதனின் காலடி தடங்கள் வடக்கு அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் தரப்பில் “ வடக்கு அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவ கால் தடங்கள் சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்கள் நடமாடுவதை சுட்டிக் காட்டுகின்றன முதல் முறையாக இம்மாதிரியான கால்தடங்கள் 2009 ஆம் ஆண்டு வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிப் படுக்கையில் இம்மாதிரியான கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நீண்ட காலமாக நிலவும் மர்மத்திற்கு வெளிச்சம் காட்ட இயலும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவிற்கு வந்தனர் என்பதையும் கண்டுபிடிக்க முயல உதவிகரமாக இருக்கும். ஆசியாவை, அலாஸ்காவுடன் இணைத்த நிலப் பாலம் வழியாக முந்தையை மனித இடப்பெயர்வுகள் இருந்ததாகவும் நம்படுகிறது. 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு…

சம்பிக்க ரணவக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ------- நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுக்காக போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையைக் கூட வழங்க தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் தியாக…

கஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர், அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார், அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் அஞ்சலி…

கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி

பிரபல இளம் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் மராத்தி மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுபம் தட்கே என்பவரை ஐஸ்வரி தேஷ்பாண்டே காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் சில தினங்களுக்கு முன்பு காரில் கோவா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் காரில் மும்பை திரும்பினார்கள். கோவா பர்தேஷ் தாலுகாவில் உள்ள ஹட்பேட் என்ற கிராமத்தின் அருகே கார் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சிறிய ஆற்றுக்குள் கவிழ்ந்தது. கார் கதவு பூட்டி இருந்ததால் அதை திறந்து இருவராலும் வெளியே வரமுடியவில்லை. இந்த விபத்தில் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே நீரில் மூழ்கி…

அஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு

நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல…

கப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி உள்ளது. இதில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2006-ல் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக் இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார். 2015-ல் வெளியான ‘ஸ்பெக்டர்’ தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்றும் இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கமாட்டேன் என்றும் டேனியல் கிரேக் தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று முடிவை மாற்றி ஐந்தாவது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதன் கடைசி நாள்…

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்துவோம் என அறிவித்த தலீபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்பட்டு வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட கேபினட்டில் பெண்களுக்கு இடம் அளிக்காத தலீபான்களின் செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. மேலும், பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் தலீபான்கள் தடை விதித்துள்ளனர். அதேபோல், மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலீபான்கள் அரசு அறிவித்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் செல்லவும், கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய…

கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த மோடி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார். நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார். அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர். மோடி அங்கு சென்றிறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க…