தலைநகரம்’ 2 ‘ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடக்கம்

சுந்தர்சி நடிக்கும் தலை நகரம்’ 2 ‘படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது .

2006 ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தலைநகரம் .இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் .

இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று சென்னையில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர் .இப்படத்தை வி. இசட் துரை இயக்குகிறார் .

தலைநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலு காமெடி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . எனவே தலைநகரம் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இது குறித்து படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

Related posts