அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ராலை நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தியும், அப்பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு கோரியே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இம்மனுக்களின் பிரதிவாதிகளாக சட்ட மாஅதிபர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
—–

Related posts