சொந்தமாக தியேட்டர் திறந்த நடிகர்

நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதோடு சொந்தமாகவும் தொழில் செய்கிறார்கள். ரியல் எஸ்டேட்டில் பல நடிகர்கள் முதலீடு செய்துள்ளனர். நட்சத்திர ஓட்டல், உணவகங்கள் நடத்துகிறார்கள். நகை வியாபாரம் செய்கின்றனர். உடற்பயிற்சி கூடங்கள் அமைத்துள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தியேட்டர் தொழிலுக்கு வந்துள்ளார். இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டாவை முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது. விஜய்தேவரகொண்டா நடித்த டியர் காமரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்த விஜய் தேவரகொண்டா சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் கட்டி உள்ளார். பல கோடிகள் செலவு செய்து அனைத்து வசதிகளுடன் இந்த தியேட்டரை…

தலைநகரம்’ 2 ‘ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடக்கம்

சுந்தர்சி நடிக்கும் தலை நகரம்' 2 'படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது . 2006 ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தலைநகரம் .இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று சென்னையில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர் .இப்படத்தை வி. இசட் துரை இயக்குகிறார் . தலைநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலு காமெடி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . எனவே தலைநகரம் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இது குறித்து படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

வறிய மக்களின் துயர் துடைக்கும் தியாகி அறக்கட்டளை நிதியம்

கொவிட் காரணமாக உயிரிழப்பவர்கள் மற்றும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் போன்றவர்களில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், வீதி விபத்துகளால் மரணிக்கும் பணவசதி இல்லாத ஏழ்மையான குடும்பங்களுக்கும் ‘தியாகி அறக்கொடை நிதியத்தின்’ தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார். அவரது இத்தகைய அர்ப்பணிப்பு நிறைந்த, மக்கள் சேவை குறித்து நாடெங்குமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் கடந்த 40 வருடங்களாக இன மத பேதம் பாராது பலதரப்பட்ட மக்களுக்கும் இவ்வாறு சமூக சேவைகளை ஆற்றி வருகின்றார். நலிவுற்ற மக்களுக்கு சேவை புரிவதில் அவரது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக வடக்கில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைவோரில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் பலவற்றுக்கு தியாகேந்திரன் ஆற்றி…

அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ராலை நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தியும், அப்பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு கோரியே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இம்மனுக்களின் பிரதிவாதிகளாக சட்ட மாஅதிபர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, ஜனாதிபதியின்…