லொஹான் ரத்வத்த : விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக இன்றையதினம் (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைக்குள் நுழைந்து, இரண்டு தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாலிடச் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் (22) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இந்த சம்பவத்தை எவ்வித கருத்து…

வல்வெட்டித்துறை நகரசபை சுயேட்சை வசமானது

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சை வேட்பாளர் ச.செல்வேந்திரா தெரிவு இன்று செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சதீஷ் ஏழு வாக்குகளை பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சுயேட்சைக் குழு உறுப்பினர் செல்வேந்திரன் எட்டு வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவானார்.

அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் தொடர் நேற்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட விவாதம் நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இம்முறை ஆரம்பமாகிய கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த 18 ஆம் திகதி அதிகாலை புறப்பட்டு, நியூயோர்க் நகரை சென்றடைந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும்…

ஜனாதிபதியின் அழைப்பிற்கு புலம்பெயர் சமூகம் வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சமாதானத்தை விரும்பும் தமிழ் சமூகத்தினர் தமது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு ஜனாதிபதி பகிரங்கமாக விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரான அனஸ்லி ரட்ணசிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார். அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை…

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பீஸ்ட்’?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' திரைப்படம், 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை', அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாளாக நிலவி வந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' வெளியாகும் எனத் தகவல் வெளியாகி வந்தது. இதன் மூலம் விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் அஜித்தின் 'வலிமை' என இரண்டிற்கும் நேரடிப் போட்டி என்று செய்திகள் வெளியாகின. இதனை வைத்து இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் திட்டி ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். 'பீஸ்ட்' வெளியீடு தொடர்பாக விசாரித்தபோது, "தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் சில காட்சிகள் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு…

படப்பிடிப்பில் அழுத ஜேம்ஸ்பாண்ட் நடிகர்

கடைசி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் டேனியல் கிரேக் படக்குழுவினர் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடி உருக்கமாக பேசி விடைபெற்றார். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி உள்ளது. இதில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இனி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்க மாட்டார். 2006-ல் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக் இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார். 2015-ல் வெளியான ஸ்பெக்டர் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்றும் இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கமாட்டேன் என்றும் டேனியல் கிரேக் தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று முடிவை மாற்றி ஐந்தாவது ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம்…

வடிவேலுவுடன் நடிக்க மறுக்கும் கதாநாயகிகள்?

v வடிவேலுவுடன் நடிக்க படகுழுவினர் கதாநாயகிகளை அணுகியதாகவும் அவர்களும் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தடை நீங்கியதால் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் சதீஷ் கதாநாயகனாக நடிக்க நாய் சேகர் என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகி வருகிறது. சதீஷ் படக்குழுவினர் நாய் சேகர் தலைப்பை முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளதால் அதே பெயரை வடிவேலு படத்துக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேலு படத்துக்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற தலைப்பை வைக்க படகுழுவினர் ஆலோசிக்கிறார்கள். இந்த படத்தில் வடிவேலுவுடன் முன்னணி கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு நடிகை தேர்வில் ஈடுபட்டு உள்ளனர். படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி இல்லை என்றும், அவருக்கு…