விபத்தில் சிக்கிய நடிகையும், பாதிக்கப்பட்ட பட அதிபர்களும்..

மூக்குத்தி அம்மன், மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜோம்பி ஆகிய படங்களில் நடித்தவர், யாஷிகா ஆனந்த்.

இவர் தனது தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார்.

அதில் அவருடைய தோழி வள்ளி செட்டி பவானி அந்த இடத்திலேயே பலியானார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.மேலும் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு சில மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும். அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் யாஷிகா ஆனந்தை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பட அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகா ஆனந்துக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்து வருகிறார்கள்.

இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

Related posts