விஜய் ஆண்டனிக்கு நாயகியாகும் ஹன்சிகா?

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன் 2’ உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் ஆண்டனி. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பிற்கான தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. பல்வேறு தீவுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படங்களை விட, இது முழுமையாக, வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

Related posts