பேய் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகள்

சுந்தர் சி. டைரக்‌ஷனில், ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ ஆகிய 2 படங்கள், ஏற்கனவே திரைக்கு வந்தன. இரண்டுமே நகைச்சுவை கலந்த பேய் படங்கள். இதையடுத்து, ‘அரண்மனை 3’ படத்தை சுந்தர் சி. உருவாக்கி இருக்கிறார்.

படத்தைப் பற்றி அவர் வெளியிட்ட தகவல்கள்:-

‘‘இதுவும் நகைச்சுவை கலந்த பேய் படம்தான். முதல் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், அந்தப் படங்களை விட, 2 மடங்கு அதிக செலவில், ‘அரண்மனை 3’ படம் உருவாகி இருக்கிறது. மிக பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறோம். ஆர்யா, ராஷிகன்னா ஆகிய இருவருடன் நானும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். விவேக், வின்சென்ட் அசோகன், யோகி பாபு, வேல ராமமூர்த்தி, மதுசூதன்ராவ், விச்சு, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக ஒரு கோடியே 50 லட்சம் செலவிடப்பட்டது. 16 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் 6 மாதங்கள் நடைபெற்றன. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வெளியீட்டு பணிகள் நடைபெறுகின்றன.’’

Related posts