ஈயடிச்சான் காப்பி வீடு கட்டும் இராணுவம்..

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் – யாழ்ப்பாணம் சுழிபுரத்தின் வறிய குடும்பத்திற்காக மேலும் ஒரு புதிய வீடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த வீட்டின் சாவியை பயனாளியான கதிரன் கோவிந்தசாமியிடம் அண்மையில் இந்து மத சடங்குகளுக்கு மத்தியில் ஒப்படைக்கப்பட்டது.

513 வது பிரிகேட்டின் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் 16 வது கெமுனு ஹேவா படையினரால் இந்த கட்டுமானத்திற்கான தங்களது திறமையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் உழைப்பையும் வழங்கினர்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பயனாளியிடம் வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அவ்வீட்டின் திறப்பு விழாவின் போது வீட்டிற்குத் தேவையான உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் வீட்டின் உரிமையாளருக்கு பிரதம விருந்தினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாவட்ட செயலக அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், 51 வது படைப்பிரிவு தளபதி, 511, 512, 513 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை தலைமையக சிப்பாய்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Related posts