அஜித்தின் வலிமை பட வியாபாரம் முடிந்தது

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. உலக அளவிலான தியேட்டர் உரிமை, ஓ.டி.டி. தள டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் தோன்றும் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் அனைத்து உரிமைகளும் பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக வெளியான தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக வருகிறார். எச்.வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை படமாக்க அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.

Related posts