முல்லைத்தீவைச் சேர்ந்த 61 பேர் இந்தியாவில் கைது!

வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு சென்ற 61 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் கனடா செல்ல திட்டமிட்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் துாத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 2 சிங்களவர்கள் மற்றும் 21 தமிழர்கள் உள்ளிட்ட 23 பேர், இந்திய முகவர் ஒருவர் என 24 பேர், ‘கியூ’ பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கர்நாடாக மாநிலத்தில் 38 பேரும், தமிழ்நாடு மதுரையில் 23 பேருமென 61 இலங்கையர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் 29 பேர் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடா நாட்டுக்கு தங்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்று, மதுரை கூடல்நகர் அசோக்குமார் என்பவர் அவர்களை மதுரை கப்பலுாரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக, 10 நாட்களாக தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அசோக்குமார் தலைமறைகியுள்ளார். நேற்று அவரது வீட்டில் பொலிசார் மேற்கொண்ட சோதனையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

Related posts