கொவிட் : மேலும் 09 பேர் வீட்டிலேயே உயிரிழப்பு

நாட்டில் நேற்று (05) ஒரு கொவிட் மரணம் மாத்திரமே பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 21 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 04 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.
—-
சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
——
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 23,945 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Related posts