எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்க ரணசிங்க, அனோமா ஹெய்யன்துடுவ, எம்.கே விக்ரமராச்சி, நவோத் சத்சர, பந்துல பெர்ணான்டோ, துஷார சஞ்சீவ, பியுமி ஜயதிலக, டி. பத்மாவதி, திலக் மற்றும் ருவன் ஆகியவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
——
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதில் சிறுமி ஒருவர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடுங்காற்றின் தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஐந்து பேர் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் புதிய பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts