சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிதயுதவி

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஒரு கோடி ரூபாய் நிதயுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக திரைப்பிரபலங்கள் பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகுமார், நடிகர் அஜித் உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் இருவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாயை, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

—–

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலமாக கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.

Related posts