தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்

கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் ஜெகமே தந்திரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே ஜெகமே தந்திரம் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்று தனுஷ் வற்புறுத்தி இருந்தார். அவரது ரசிகர்களும் ஓ.டி.டி.யில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி ஓ.டி.டி.யில் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். லால் ஜோஸ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே சூரரை போற்று, க.பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன், பெண்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

Related posts