‘அண்ணாத்த’ இறுதிகட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்..

ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடந்தபோது, படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ரஜினிகாந்த் தனி விமானத்தில் கடந்த 7-ந் தேதி ஐதராபாத் சென்று தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பில் கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்புகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன.
படக்குழுவினர் வெளியே செல்லவும், வெளிநபர்கள் படக்குழுவினரை சந்திக்கவும் தடை விதித்தனர். படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், 2 வாரங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாரா தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரஜினிகாந்தும், நயன்தாராவும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி உள்ளது. ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

Related posts