சினிமா போக்கை மாற்றிய நடிகைகள்

தமிழில் மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசேண்ட்ரா தற்போது பார்ட்டி, கள்ளபாட், கசட தபற போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- ‘நான் சினிமாவில் புதுமையான முயற்சிகள் எடுக்கிறேன். எனக்கு படங்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வருகிற படங்களையெல்லாம் ஒப்புக்கொள் ஒரு ஆண்டுக்கு ஐந்தாறு படங்களில் நடி என்று ஆலோசனை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதை ஏற்க மாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். சினிமா துறையில் நான் வந்தபோது இருந்ததை விட இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் சிறிய பெரிய நடிகர்கள் வித்தியாசம் பார்க்காமல் சேர்ந்து பழகுவது எனக்கு பிடித்துள்ளது. பெரிய இயக்குனர்கள் மட்டுமின்றி புதிதாக வந்த இயக்குனர்களும் வெற்றி படங்களை கொடுக்கிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எடுப்பதும் அதை ரசிகர்கள் ஆதரிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, திரிஷா போன்றவர்கள் இந்த மாற்றத்தை உருவாக்கியதில் முன்னணியில் இருக்கிறார்கள். வழக்கமான சினிமாவின் போக்கை இவர்கள் மாற்றி விட்டனர். அதற்கு முன்னால் நடிகைகளுக்கு சினிமாவில் குறிப்பிட்ட வயது வரைதான் நடிக்க முடியும் என்ற நிலைமையும் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நீடிக்க முடியாது என்று நிலைமையும் இருந்தது”

Related posts