ஓட்டு போடாத விஜயகாந்த்: தே.மு.தி.க.,வினர் வருத்தம்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் வந்து ஓட்டளித்தனர்.
விஜயகாந்த், மாலையில் வந்து ஓட்டளிப்பார்’ என, விஜய பிரபாகரன் கூறினார். இதனால், காலை முதல் இரவு, 7:00 வரை, விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்; கடைசி வரை, விஜயகாந்த் வரவில்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்தனர்

Related posts